நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 13 November 2013

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை

தஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-11-13  ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

                 தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்கு முன்பே 6 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.

ஆனாலும் திட்டமிட்டபடி திறப்பு விழா நிகழ்ச்சி 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படைத்துறையினர், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். 
        இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது

                இச்செய்தியை அறியும் பொது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே தோன்றுகின்றது. 

படங்கள்....











No comments:

Post a Comment