நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 26 November 2014

மாவீரர் நாள் நவம்பர் 27


மாவீரர் நாள்  நவம்பர் 27


    1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம்லெப்ரினன்ட் சங்கர் சத்தியநாதன் தமிழீழ தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது
      அவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து சிகிச்சை பெறும்போது வீரச்சாவு அடைத்தார்.


      

         மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்



 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.





        
           ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்



மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..

துயிலும் இல்லம்


            மதிப்பிற்குரியவர்களே!  இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள். உங்கள் பாதங்களை மெதுவாக பதியுங்கள்




             தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம் கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும் யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.



            "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." 
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் on மாவீரர் தினம்


         "நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்..."  
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் on மாவீரர் தினம்







மாவீரர் -  அணையாத தீபங்கள்

"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன."  
                        -  தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன், மாவீரர் தினம்




       எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென றுதியெடுத்துக்கொள்வோமாக.


"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

நட்சத்திரன்

No comments:

Post a Comment