நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 15 May 2013

உலகின் முதல் தற்கொலைப் படை போராளி 'வீரத்தாய்' குயிலி...

            இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள் அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர் வீரமங்கை வேலுநாச்சியார்..அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் வீரத்தாய் குயிலி...

 
            இலங்கையில் தமிழீழம் கோரி விடுதலைப் போர் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில் பங்கேற்றனர். அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள்...வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவை... வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலில்..
 
       
            1730ம் ஆண்டு பிறந்தவர் வேலுநாச்சியார். இளம்பிராயத்திலேயே அனைத்து போர் பயிற்சிகளையும் பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் வேலு நாச்சியார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் மகன் முத்துவடுகநாதரை திருமணம் செய்து கொண்டார். 1772ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது சூழ்ச்சியால் முத்துவநடுகநாதர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடன் இளைய மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகின்றனர். இதனால் மகள் வெள்ளச்சி நாச்சியார், தளபதிகள் மருது பாண்டியர்கள் துணையோடு திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி என்ற பாளையத்தில் தஞ்சம் அடைந்தார் வேலுநாச்சியார்,...
 
 

         
          விருப்பாட்சி பாளையம் கோபால் நாயக்கர் விருப்பாட்சி பாளையமானது ஹைதர் அலியின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருந்தது. ஹைதர் அலி உதவியுடன் நவாப்- ஆங்கிலேயர் படைகளை வீழ்த்தி சிவகங்கையை மீட்க படை திரட்டிக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.

விருப்பாட்சி பாளையத்தில் வேலுநாச்சியார் தங்கியிருந்த காலத்தில் அவருடன் அவரது சிலம்பு வாத்தியாரான வெற்றிவேலுவும் உடன் இருந்தார். அவரை மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே நம்பிவந்தார் வேலுநாச்சியார். ஆனால் வெற்றிவேலு வாத்தியாரோ, வேலுநாச்சியாரின் போர் திட்டங்களை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்து வந்தார். விருப்பாட்சியில் இருந்து சிவகங்கையில் இருக்கும் தாயாரைப் பார்க்க குயிலி செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது வெற்றிவேலு வாத்தியார், குயிலியிடம் எழுதப் படிக்கத் தெரியுமா எனக் கேட்க தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்போது வெற்றி வேலு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மை அருகே இருக்கும் மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலு வாத்தியாரின் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார் குயிலி. சந்தேகப்பட்டு அக்கடிதத்தைப் பிரித்துப் படிக்க வெற்றிவேலுவாத்தியாரின் துரோகம் தெரியவருகிறது. வெற்றிவேலு வாத்தியாரின் குடிசைக்கு ஆக்ரோஷத்துடன் சென்று அவரைக் குத்தி படுகொலை செய்து விடுகிறார்.


மெய்க்காப்பாளரான குயிலி

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும் நம்பிக்கைக்குரியவராக வீரத்துடன் செயல்படுகிறவராக இருந்ததால் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை சிலர் எதிர்த்த போது சாதி பார்க்காதவர்கள்தான் என் படையணியில் இருக்க வேண்டும் பிரகடனமே செய்தவர் வேலுநாச்சியார்.

போர்க்களத்தில் குயிலி..

         மருது சகோதரர்கள் துணையுடன் 8 ஆண்டுகாலத்துக்குப் பின் 1780ஆம் ஆண்டு விருப்பாட்சி பாளையத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியாரின் படை அணி புறப்பட்டது. அதில் பெண்கள் படையான உடையாள் படை அணிக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியார் படை திண்டுக்கல் தொடங்கி ஒவ்வொரு தடையையும் தகர்த்துக் கொண்டு சிவகங்கை நோக்கி சீறியது 
ஒற்றர் குயிலி

       ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் வரிசையாக படை அணியை நிறுத்தியிருந்தான். அரண்மனைக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, நாளை விஜயதசமி திருவிழா.. அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர்.. அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டார். அற்புதமான யோசனையை சொன்ன நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் கூற அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போதுதான் தெரிந்தது அது குயிலி என.. தாம் அனுமதியின்றி வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார் குயிலி.

தற்கொலைப்படையான குயிலி

          குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார் படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது...இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையைவிட்டு வெளியேறினான்... வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய் குயிலி... ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி.. இந்த வீரத்தாய் குயிலிக்குத்தான் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.



Reference:http://www.tamil.oneindia.in

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் போலி ஆட்கள்... சம்பளத்தில் ஊழல்: சி.ஏ.ஜி அறிக்கை

             தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், கூலி மற்றும் போலி ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    
             தமிழக அரசின் நிதி நிலை, பொருளாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு, பொது மற்றும் சமூகத் துறைகள் ஆகியவற்றின் 2011 - 12ம் ஆண்டுக்கான தணிக்கை குறித்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைகள் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 24 சதவிகித குடும்பங்களே முழுமையாக பயனடைந்தன என்றும், பதிவு செய்த 76 லட்சத்து 49 ஆயிரம் குடும்பங்களில் 14 லட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களே முழுப் பயனடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தினக் கூலி பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், 90 ரூபாய் முதல் 119 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்க வேண்டிய தினக்கூலியை 72 ரூபாய் முதல் 83 ரூபாய் என்ற அடிப்படையிலே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
         மேலும் தினக் கூலி பட்டியலில் போலியான ஆட்களின் பெயர்களைச் சேர்ந்து திட்ட நிதி கையாடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரி ஏய்ப்புக்குரிய பொருட்கள் குறித்து கண்காணிப்பு அமைப்பு இல்லை என்றும், இதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 மாநகராட்சிகள், 56 நகராட்சிகள், 64 பேரூராட்சிகள் 2009 - 2010ம் ஆண்டுக்கான கணக்குகளை அளிக்கவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
        தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒரு முறை கூடவில்லை என்றும், பேரிடர் மேலாண்மை விதிகள் மாநில அரசால் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகையில் முன்னெச்சரிக்கை சாதனங்கள் இயங்கும் நிலையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாகுபடி நிலங்கள் பிற காரணங்களுக்காக மாற்றப்படுவதை தடுக்க எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், 2007ம் ஆண்டு 24 லட்சம் ஏக்கராக இருந்த பயிரிடப்படாத நிலம் 2010ம் ஆண்டில் 25 லட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல் தணிக்கை துறை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.

Reference:http://www.tamil.oneindia.in

Tuesday 14 May 2013

கண்ணதாசன் அவர்கள் மணிமொழிகள் !

  • தேவைப்பட்டாலொழியக்    கோபம்  கொள்ளாதே.
  • நன்மை    செய்தவனுக்கு  நன்றி  காட்டு.
  • தீமை  செய்தவனை  மறந்து  விடு.
  • எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.
  • வென்றவனுக்கு  மலையும்  கடுகு. தோற்றவனுக்கு  கடுகும்  மலை.
  • ஆணவமும்,  அழிவும்  இறைட்டைக்  குழந்தைகள்.
  • அற்ப  ஆசைகள்  பெரிய  வெற்றியைத்  தேடித்  தருவதில்லை.
  • சோம்பி  நிற்கும்  மனிதனிடம்  துன்பங்கள்  உற்ப்பத்தியாகின்றன.
  • தாய்ப்பால்  கொடுக்காத  குழந்தைகளுக்கு  தாய்ப்பாசம்  இருக்காது.
  • இலக்கியங்கள்  எல்லாம்  மனிதர்களுடைய  அனுபவத்தில்  உதித்தவையே.
  • நீயாகவே  முடிவு  செய். நீயாகவே  செயல்  படு.
  • முடிந்தால்  நன்மை  செய். தீமை  செய்யாதே.
  • சினிமா-பயன்  படுத்த  தெரிந்தவனுக்கு  அற்புதமான  ஆயுதம்.
  • சிறு  வயதில்  வரவு  வையுங்கள்.  பெரிய  வயதில்  செலவளிங்கள்.
  • நம்  மனதளவு  எவ்வளவோ அவ்வளவு  தான்  உலகம்.
  • வாழ்வில்  நகைச்  சுவை  வேண்டும். சிரிக்காதவன்  மிருகம்.
  • அருங்குறள்  1330-ம்  கடலளவு.  அதன்  முன்  உலகம் கடுகளவு.
  • வாழ்ககையின்  ஒவ்வொரு  அணுவையும்  அனுபவிக்க  வேண்டும்.
  • எதையும்  தெரியாது  என்று  சொல்லாமல்  தெரியுமென  சொல்.
  • வாழ்வில்  துணிவு   வேண்டும்.
  • விதி  என்னும்  மூலத்தில்  இருந்து   முளைத்த  கிளையே  மதி.
  • காற்றுள்ள  போதே  தூற்றிக்கணும்  என்பதை  கவனத்தில்  வை.
  • வாழ்க்கையில்  முன்னேற  எந்த  விமர்சனத்தையும்  தாங்கிக்கொள்.
  • திறமை  உள்ளவனுக்கு  வாய்ப்பு  தூரமில்லை.

ஒரு நாட்டின் எல்லையை ஊடுருவினால் என்ன கிடைக்கும்?



வட கொரியா நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
12 வருட கடுஞ்சிறை தண்டனை ! 

இரானிய நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
சாகும் வரை சிறை வாசம்! 

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
குண்டடிப்பட்டு நிச்சயம் மரணம்! 

சௌதி அரேபியா நாட்டின் எல்லையை ஊடுருவினால்,
தங்களையே தாங்கள் மறக்கவேண்டி வரும் !

வெனிசுலா நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
உளவாளி என முத்திரை, இடப்பட்டு விதி முடிக்கப்படும்! 

கியூபா நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
தனித் தீவு சிறைக்கு தள்ளப்படுவர்! 

பிரிட்டன் நாட்டின் எல்லையை ஊடுருவினால், 
கைது செய்யப்பட்டு,விசாரணையில், 
மனித குலத்திலிருந்தே தள்ளி வைக்கப்படுவர்! 

ஆனால், ஊடுருபவர்கள் ஒரு பாகிஷ்தானியரகவோ 

அல்லது பங்களா தேசத்தவராகவோ இருந்து, 

இந்திய நாட்டின் எல்லையை ஊடுருவினால், 

கிடைப்பது

  1. ரேசன் கார்டு, 
  2. பாஸ்போர்ட், 
  3. ஹஜ் யாத்திரைக்கு தள்ளுபடி, 
  4. டிரைவர் லைசென்ஸ்,
  5. வேலைக்கு முன்னுரிமை, 
  6. சிறப்பு சலுகைகள், 
  7. கிரெடிட் கார்டுகள், 
  8. வீடு வாங்க மான்யத்தில் கடன் தொகை, 
  9. இலவச கல்வி, பேச்சுரிமை,
  10. இலவச வீட்டு மனை, 
  11. எல்லாவற்றிற்கும் மேலாக வோட்டுரிமை.


வாழ்க பாரத நாடு.

வாழ்க பாரத நாடு.

வாழ்க பாரத நாடு.


Monday 13 May 2013

கச்சத்தீவை கோரும் உரிமை தமிழகத்திற்கு இல்லை – டக்ளஸ்


செய்தி:கச்சத்தீவை கோரும் உரிமை தமிழகத்திற்கு இல்லை – டக்ளஸ்

"வாத்து முட்டை " : Correct sir காங்கிரஸ் அரசு இருக்குற வர தமிழனுக்கு எந்த உரிமையும் கிடையாது


37-வது அகவையில் கால் பதித்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு

       தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மே 5-ம் தேதியன்று 37-வது அகவையில் கால் பதித்து.

    1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

  அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.ரி.ரி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார்.

   தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.

   தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

  உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

   அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.

அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

  முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.

    இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.

  குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

 போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.

    ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரணி. சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி

03. வான்படை 
04. கரும்புலிகள் 
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு. 
06. புலனாய்வுத்துறை 
07. வேவுப்பிரிவு 
08. ஒளிப்பதிவுப் பிரிவு 
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 
10. கணணிப் பிரிவு 
11. மாணவர் அமைப்பு 
12. தமிழீழ வைப்பகம் 
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 
14. அனைத்துலகச் செயலகம் 
15. சுங்கவரித் துறை 
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 
18. அரசறிவியற் கல்லூரி 
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை 
21. தமிழீழ நிதித்துறை 
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) 
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) 
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) 
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்) 
29. அன்பு இல்லம் (முதியோர்) 
30. பொத்தகசாலை 
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 
32. ஈழநாதம் செய்தி இதழ் 
33. வெளிச்சம் செய்தி இதழ் 
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 
36. நிதர்சனம் 
37. புலிகளின் குரல் வானொலி 
38. மாவீரர் பணிமனை 
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான) 
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) 
41. சேரன் வாணிபம் 
42. சேரன் சுவையகம் 
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு 
44. பாண்டியன் வாணிபம் 
45. பாண்டியன் சுவையூற்று 
46. சோழன் தயாரிப்புகள் 
47. வழங்கற் பிரிவு 
48. சூழல் நல்லாட்சி ஆணையகம் 
49. நிர்வாக சேவை 
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 
55. தமிழீழ விளையாட்டுத்துறை 
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


Reference:http://www.pathivu.com/news/24700/57/37/d,article_full.aspx

மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்-தமிழீழ விடுதலைப்புலிகள்

               மே18 தமிழீழ விடுதலைப்புலிகளின் மண்டியிடாத வீரத்தையும், போராடும் புலிகளுக்குத் துணையாக நின்ற மக்களின் தளராத உறுதியையும் வெளிப்படுத்தும் நாள். சிங்களப் பேரினவாதம் விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நாள். பூமிப்பந்திலுள்ள தமிழரின் நெஞ்சங்களில் எல்லாம்; விடுதலை நெருப்பைக் கனன்று எரிய வைத்த நாள்.

                 செந்நெருப்பு என்பது ஆக்கத்தின் குறியீடு. புத்தெழுச்சியின் குறியீடு. அதேநேரம் பேரழிப்பின் குறியீடு. போராளிகளின் மண்டியிடாத வீரம் - மக்களின் தளராத உறுதி இனமொன்றின் பேரழிப்பு  விடுதலைப் போராட்டத்தின் புத்தெழுச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் குறியீடாகவே செந்நெருப்பு விளங்குகிறது. எனவேதான் மே18 முள்ளிவாய்க்கால் நாளை நாம் “செந்நெருப்புநாள்”  எனப் பெயரிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் காலங்காலமாக நினைவு கொள்ள வேண்டிய நாளாகப் பிரகடனம் செய்கின்றோம். “மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்” இனிவருங்காலமெல்லாம், தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரினதும் வாழ்விலும் வரலாற்றிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய நாளாகத் திகழும்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/may18-mullivaaikkaal-senneruppunaal.jpg

Sunday 12 May 2013

அப்படியே கச்சதீவையும் மீட்டுருங்க சல்மான் ஜி

செய்தி: சீனாவுடன் மீண்டும் எல்லைப் பிரச்சனை ஏற்படாது : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி.....
"வாத்து முட்டை " : சல்மான் குர்ஷித் ஜி அப்படியே கச்சதீவ மீட்டு தமிழக எல்லையையும் உறுதி செய்யுங்கள். உங்க கச்சிகாரங்க 1974 மற்றும் 1976 ல்  ஒப்பந்தம்கிற பெயர்ல செஞ்ச தப்புக்கு பரிகாரம் செஞ்ச மாதிரி இருக்கும் .



Friday 10 May 2013

The War Crime Day - May 17












தமிழ் ஈழ அரசாங்கம்






























"மே 17" - போர் குற்ற நாள்










பணம் தின்னும் அரசியல் கழுகுகளே உனக்கு என் மக்கள் பிணம் தின்னவும்  ஆசையா!!!!
இது புத்தனுக்கு படைக்கப்பட்ட மனிதக் கறி படையலா...!!!
ஐயோ அவர் சைவம் என்று அல்லவா நினைத்தேன்...!!!!!
அன்பை போதித்த புத்தனுக்கு மனித படையல் வைத்த சிங்கள கூட்டமே,
உன் தண்டனை நாள் வெகு தொலைவில் இல்லை. ...


"மே 17"  - போர் குற்ற நாள்

விழி, குரல் கொடு ........
-நட்ச்சத்திரன்