நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Saturday 27 April 2013

போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை


      கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
    அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ‘போர் வலயமற்ற’ பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார்.
அவர் கூறுகிறார்,
    நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.
269345_172457109571751_412962890_nகிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும். வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் ‘இயந்திரங்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.
உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது ‘பொசுபரசுக் குண்டுகள்’ வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.
    பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர்.
417546_278081518991778_1659394952_nகொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது. இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.
      ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம். அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம்.
நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது.
மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன.
நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். சவீந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம்.
166750_340391489413448_1385191045_nமே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன. இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் “பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்” எனக் கூறினார்கள்.
      அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம். ஆனால் இந்த மூன்று தடவைகளும் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், “நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்” என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர்.
அதில் நின்ற சிறிலங்கா இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், “ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்” எனக் கூறினான்.
எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் “நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்” எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம். அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர். கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது.
இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர்.
இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார்.
அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது.
480763_348472891938641_1136816556_n“நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்” என சிரித்தவாறு கூறினார்கள்.
காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர்.
நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே “நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர்.
ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், “நாங்கள் மதகுருமார்கள்” என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம்.
கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார். நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை.
நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன. இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.
நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர்.
301654_278081325658464_1192022841_nஇதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ‘ரியூப் லைற்றுக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன்.
நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை ‘விடுதலைப் புலிகளின் முகாம்’ எனவும் ‘வலயம் 04′ எனவும் அழைத்தனர்.
எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கப் படையினர் அக்கராயன், முருகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது.
ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழில் மொழியாக்கம் – நித்தியபாரதி

செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம். மரத்தில் ஏறியும் போராட்டம்!

        செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும், திறந்த வெளி முகாமிற்கு மாற்றவேண்டும் , குடும்பத்துடன் தாங்கள் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவ்வப்போது உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது. இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகளும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் இதுவரை அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வில்லை. 

         இந்நிலையில் ,
ஏப்ரல் 18 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமை சேர்ந்த ஈழ நேரு, செல்லக்குமார் மற்றும் சிறிகாந்தன் ஆகிய மூவர்களும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மூன்று நாட்களுக்கு பின் காவல்துறை அவர்களை வலுக் கட்டாயமாக அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது. எனினும்,  மருத்துவமனையிலும் இந்த மூன்று தமிழர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இதில் சிறிகாந்தன் என்பவர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் விளங்காது என்பது குறிப்பிடத் தக்கது.  இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் சிறப்பு முகாமில் உள்ள 13 முகாம் வாசிகள் அங்குள்ள மரத்தின் மீது ஏறி போராட்டம் செய்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மரத்தில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 26 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மரத்தின் மீதே இருந்து வருகின்றனர். 

இது குறித்து அரசு வழக்கம் போல மௌனமே சாதித்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடாமல் இருப்பது தமிழ் உணர்வாளர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. ஈழத்தில் தான் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி கடும் துயரை அடைந்து வருகின்றனர். தாய் தமிழகத்திலும் ஈழ தமிழர்களுக்கு அதே நிலை தானா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழீழ ஆதரவாளர்கள். அரசு இதை கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . 

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-senkalpattumarammm%20(1).jpg

Friday 26 April 2013

அந்தோணி ஐயா சொல்லிட்டாரு....

ஏ கே அந்தோணி: தமிழக மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள இலங்கை ராணுவத்துக்கு அறிவுறுத்துங்கள் ...



செய்தி:தமிழக மீனவர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள இலங்கை ராணுவத்துக்கு அறிவுறுத்துங்கள் என்று, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனி, இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அந்தோணி, “இந்திய மீனவர்கள் அடிக்கடி, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைத் தடுக்க 2008ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில், ஒப்பந்தம் போடப்பட்டது.
அதாவது இரு நாடுகளை சேர்ந்த மீனவர்கள் வழிதவறி எல்லையைத் தாண்டினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், சர்வதேச கடல் எல்லைக்கு அருகே வரும் மீனவர்களை தாக்க கூடாது என்றும், அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதை இப்போது இலங்கை அரசுக்கு நினைவூட்டி, தமிழக மீனவர்களிடம், இலங்கை ராணுவ வீரர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

"வாத்து முட்டை " :


ம்ம்... ஐயா சொல்லிட்டாரு  இனி பயபடாம மீன் புடிக்க போகலாம் ......

சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த 40 மாணவர்கள் கைது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி 25-04-13 இரவு 8 மணிக்கு நடந்தது .

      இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த  ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை  காவல்துறையினரால்  சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் .

   ஐபிஎல் போட்டியில் மாணவர்கள் உள்ளே நுழைந்து தமிழீழ ஆதரவு செய்தியை உலகிற்கு சொல்ல வேண்டும் என எண்ணி இருந்தனர். அனைவரும் தமிழீழ விடுதலை வேண்டும் என வாசகம் அடங்கிய சட்டையை அணிந்து கொண்டு உள்ள செல்வதாக திட்டமிட்டனர். அதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மாணவர்கள் செய்திருந்தனர்.
           எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறுக்கும் -க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தபட்டும் அதனை மீறி மாணவர்கள் மைதானத்துக்குள் சென்று அவர்களது டிஷர்ட் களில் We Want Tamil Eelam , boycott sri lanka என்று அச்சிடப்பட்ட பனியன் துணியை உடலுக்கு போட்டு கொண்டு இருக்கையின் மேல் நின்று கீழ்க்கண்டவாறு முழக்கங்ககளையிட்டு போராட்டம் நடந்த இருந்தனர் . இதனை தொலைபேசி ஊடக ஓட்டுகேட்ட காவல்துறையினர்  மாணவர்களை   சுற்றிவளைத்து கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

 மாணவர்களின் தொலைபேசி எண்ணை தந்திரமாக ஒட்டுக் கேட்ட காவல் துறை மாணவர்கள் கிரிக்கெட் திடலுக்கு அருகே வந்த போது, 40 மாணவர்களை கைது செய்தது.

சுமார் 200 காவல்துறையினர் மாணவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி மாணவர்களை கைது செய்வதாக கூறியுள்ளது காவல்துறை. கைது செய்த மாணவர்களை எழும்பூர் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டனர்.

இதனால் இன்று நடக்கும் போட்டி முடிவடைந்த பின் தான் மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கனவே இந்து நாளிதழில் பிரபாகரன் என்ற மாணவர் தனது தொலைபேசியை காவல்துறை ஒட்டுக் கேட்பதாக புகார் கூறியிருந்தார். அது இன்று நிரூபணம் ஆகி உள்ளது.

மேலும் மாணவர்களை கைது செய்வதற்கு காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை. காரணம் மாணவர்கள் எந்தவித போராட்டம் செய்யவும் திட்டமிட வில்லை. மாணவர்களின் அனுமதி சீட்டையும் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/iplmaanavarpooraaddam5.jpg


new


இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல்! படைகளை வாபஸ் பெற சீனா திடீர் நிபந்தனை


   சீனாவின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிப்பதற்காகஎல்லையில் படைகளைக் குவிக்க இந்தியாதிட்டமிட்டுள்ளது.

indian border
    ஜம்மு காஷ்மீர்மாநிலம்லடாக்பகுதியில்அமைந்துள்ளதௌலத் பெக் ஓல்டிஎன்ற இடத்துக்குள்சீன ராணுவத்தினர்சமீபத்தில்ஊடுருவினர்.அவர்கள் அங்கு கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளதோடு,அதை விட்டு வெளியேறவும் மறுத்து வருகின்றனர்இந்தவிவகாரத்தால் இரு நாட்டு எல்லையில் பதற்றம்ஏற்பட்டுள்ளதுஎல்லையில் மேலும் படைகளைக் குவிக்கும்நடவடிக்கையிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், 12ஆவது பாதுகாப்புத் திட்டப்படிராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த 1,500வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் சென்றுஎல்லையில் குவிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதுவடகிழக்குமாநிலப் பகுதிகளில் இரண்டு பட்டாலியன்கள் நிறுத்தப்படஉள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.
சமீபத்தில்சீன எல்லையையொட்டியுள்ள பகுதிகளில்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள திஸ்பூர் மற்றும் திமாபூரைமையமாகக் கொண்ட படைப்பிரிவுகளின் கட்டுப்பாட்டில்புதிய படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
சீனா மறுப்புஊடுருவல் செய்த இடத்திலிருந்து சீன வீரர்கள்உடனடியாக வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின்கோரிக்கையை சீனா தொடர்ந்து அலட்சியப்படுத்திவருகிறதுதங்கள் வீரர்கள் லடாக் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டவில்லை என்று சீனாதொடர்ந்து கூறி வருகிறது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளரர் ஹுவா சுன்யிங் கூறுகையில், ""இரு தரப்புஒப்பந்தங்களை முழுவதுமாகப் பின்பற்றியே சீனப்படைவீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்இந்தியஎல்லையையொட்டி அமைந்துள்ள சீனப் பகுதிகளில்வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்அவர்கள்எப்போதுமே எல்லை தாண்டியதில்லை'' என்றார்.
மீண்டும் அத்துமீறல்இந்தச் சூழ்நிலையில்சீன ராணுவஹெலிகாப்டர்கள் காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சில நூறுகி.மீதூரத்தில் உள்ள சுமர் என்ற இடத்தில் இந்தியவான்பகுதியில் அத்துமீறிப் பறந்துள்ளனஇப்பகுதியில் சீனஹெலிகாப்டர்கள் கடந்த 21ஆம் தேதி சில மணிநேரங்களுக்குப் பறந்து வட்டமடித்ததாகவும்அங்கு சிலஉணவுப் பெட்டிகள்சிகரெட் பாக்கெட்டுகள்சீன மொழியில்எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றைப் போட்டு விட்டு,அவை திரும்பி விட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள்தெரிவித்தன.
காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்இதனிடையேசீனஊடுருவல் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறுமத்திய அரசை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவலியுறுத்தியுள்ளார்.
லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தை கடுமையாகஎச்சரிக்க வேண்டும்எல்லையில் அத்துமீறல்விவகாரத்தில் பாகிஸ்தான்சீனா ஆகிய இரு நாடுகளிடம்ஒரே விதமானகடுமையான அணுகுமுறையைக்கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வுஇந்த விவகாரம் குறித்துமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் .கே.அந்தோனிகூறுகையில், ""இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம்ஊடுருவியுள்ளதாகக் கூறப்படுவதையடுத்துஅந்தப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எல்லைக் கோட்டை இரு நாட்டு ராணுவமும் தாண்டக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்தற்போது எழுந்துள்ளபிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்'' என்றார்
எல்லைக்குள் ஊடுருவிய படைகளை வாபஸ் பெறசீனா திடீர் நிபந்தனை
இந்தியாவுக்குள் ஊடுருவிய ராணுவத்தை வாபஸ் பெறவேண்டுமானால்எல்லையில் புதிதாக கட்டியுள்ள இந்தியராணுவ அரண்களை இடிக்க வேண்டும் என்று சீனாநிபந்தனை விதித்துள்ளதுஇந்தியா இதை ஏற்க மறுத்துமேலும் படைகளை குவித்து வருவதால் பதற்றம்அதிகரித்துள்ளதுஅடுத்த மாதம் இந்தியா வரதிட்டமிட்டுள்ள சீன பிரதமரின் வருகை ரத்தாகுமா என்றகேள்வி எழுந்துள்ளது.
காஷ்மீரில் லடாக் பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு இந்தியஎல்லைக்குள் சீன ராணுவத்தினர் 10 கி.மீதூரம்ஊடுருவியதுடன் கூடாரம் அமைத்துள்ளனர்இதுகுறித்துஅறிந்தவுடன் சீனாவின் கவனத்துக்கு மத்திய அரசுகொண்டு சென்றதுஎல்லையில் இருதரப்புராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர்தூதரகஅளவிலும் பேச்சுக்கள் நடக்கிறதுஊடுருவலுக்குமுன்பிருந்த நிலைக்கு சீன வீரர்கள் திரும்ப வேண்டும்என்று இந்தியா கூறுகிறதுஆனால்ஊடுருவலே இல்லைஎன்றும் எல்லைப் பகுதியில் தங்கள் வீரர்கள் ரோந்தில்ஈடுபட்டுள்ளதாகவும் சீனா கூறுகிறது.
மேலும்தங்கள் ராணுவத்தை திரும்ப பெறவேண்டுமானால் லடாக் பகுதியில் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புக்காக இந்தியா அமைத்துள்ள அரண்களைஇடிக்க வேண்டும் என்றும் சீனா திடீர் நிபந்தனைவிதித்துள்ளதுசீனாவின் இந்த கோரிக்கையை இந்தியாஏற்கவில்லைதங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரைபடைகளை திரும்ப பெற முடியாது என்று சீனா முரண்டுபிடிக்கிறதுசீன ராணுவத்தின் ஊடுருவலால் லடாக்பகுதிக்கு ஏற்கனவே நமது ராணுவம் விரைந்துள்ளது.அந்நாடு பிடிவாதம் பிடிக்கும் நிலையில் மேற்கொண்டுபடைகளை இந்தியா குவித்து வருகிறதுஇதனால்,எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
திட்டமிட்ட ஊடுருவல்லடாக்கில் ஊடுருவல் நடப்பதற்குஒரு மாதத்துக்கு முன்பேஎல்லை பகுதியில்தேவையில்லாமல் படைகளை அதிகரிக்கக் கூடாதுஎன்றும்இரவு ரோந்துகளை தவிர்த்தல்உள்ளூர் ராணுவகமாண்டர்கள் அளவில் இருதரப்பு கூட்டங்கள் அடிக்கடிநடத்துவது போன்ற அம்சங்களை கொண்ட வரைவுஒப்பந்தத்தை சீனா இந்தியாவிடம் அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில்அந்நாட்டு ராணுவத்தினர் இந்தியபகுதிக்குள் ஊடுருவியிருப்பது திட்டமிட்டு நடந்ததாகவேகருதப்படுகிறதுஒப்பந்தத்தை ஏற்குமாறு இந்தியாவைநிர்பந்திக்கவே ஊடுருவல் நடந்திருப்பதாகவும் சர்வதேசஅரங்கில் பார்க்கப்படுகிறதுபடை குறைப்பு உள்ளிட்ட சிலஅம்சங்கள் இந்தியா தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டவை.லடாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணமுயற்சித்து வரும் நிலையில்சீனாவின் ஒப்பந்தத்தையும்ராணுவ அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.