நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Saturday 27 April 2013

செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம். மரத்தில் ஏறியும் போராட்டம்!

        செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும், திறந்த வெளி முகாமிற்கு மாற்றவேண்டும் , குடும்பத்துடன் தாங்கள் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவ்வப்போது உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது. இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகளும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் இதுவரை அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வில்லை. 

         இந்நிலையில் ,
ஏப்ரல் 18 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமை சேர்ந்த ஈழ நேரு, செல்லக்குமார் மற்றும் சிறிகாந்தன் ஆகிய மூவர்களும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மூன்று நாட்களுக்கு பின் காவல்துறை அவர்களை வலுக் கட்டாயமாக அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது. எனினும்,  மருத்துவமனையிலும் இந்த மூன்று தமிழர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இதில் சிறிகாந்தன் என்பவர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் விளங்காது என்பது குறிப்பிடத் தக்கது.  இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் சிறப்பு முகாமில் உள்ள 13 முகாம் வாசிகள் அங்குள்ள மரத்தின் மீது ஏறி போராட்டம் செய்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மரத்தில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 26 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மரத்தின் மீதே இருந்து வருகின்றனர். 

இது குறித்து அரசு வழக்கம் போல மௌனமே சாதித்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடாமல் இருப்பது தமிழ் உணர்வாளர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. ஈழத்தில் தான் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி கடும் துயரை அடைந்து வருகின்றனர். தாய் தமிழகத்திலும் ஈழ தமிழர்களுக்கு அதே நிலை தானா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழீழ ஆதரவாளர்கள். அரசு இதை கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . 

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-senkalpattumarammm%20(1).jpg

No comments:

Post a Comment