நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 26 November 2014

மாவீரர் நாள் நவம்பர் 27


மாவீரர் நாள்  நவம்பர் 27


    1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம்லெப்ரினன்ட் சங்கர் சத்தியநாதன் தமிழீழ தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது
      அவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து சிகிச்சை பெறும்போது வீரச்சாவு அடைத்தார்.


      

         மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்



 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.





        
           ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்



மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..

துயிலும் இல்லம்


            மதிப்பிற்குரியவர்களே!  இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள். உங்கள் பாதங்களை மெதுவாக பதியுங்கள்




             தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம் கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும் யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.



            "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." 
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் on மாவீரர் தினம்


         "நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்..."  
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் on மாவீரர் தினம்







மாவீரர் -  அணையாத தீபங்கள்

"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன."  
                        -  தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன், மாவீரர் தினம்




       எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென றுதியெடுத்துக்கொள்வோமாக.


"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

நட்சத்திரன்

தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதிவு

தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

 



தலைவர் பற்றி அரிய சில குறிப்புகள் இதோ..
பிறந்த தேதி: 26.11.1954 முன்னிரவு 7 மணி 18 நிமிடம்.
2 சகோதரிகள், மற்றும் 1 சகோதரர். (சகோதரர் டென்மார்கில், சகோதரிகளில் ஒருவர் இந்தியா மற்றையவர் கனடா)
சிறுவதில் விளையாடுவது: வாலி-போல் ,
சிறுவதில் பிடித்த உணவு: பிட்டு , தேங்காய் சம்பல், இரால் வறுவல்.
வளர்ந்த நிலையில் அவரைக் கவர்ந்தவர்கள்: சுபாஷ் சந்திரபோஸ், கரிகால மன்னன், திருப்பூர் குமரன், வாஞ்சிநாத ஐயர், மேலும் பலர்..
பிடித்த நூல்: பகவத்கீதை, பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள்
பிடித்த ஆங்கில நடிகர்: கிளீன் -டிஸ்-வூட்
பொழுதுபோக்கில் பிடித்தவை: புத்தகம் வாசித்தல், சமைத்தல்,
வளர்ந்த நிலையில் அவரைக் கவர்ந்த உணவுகள்: சீன உணவுகள், உடும்பு இறைச்சி, ரால் வறுவல்,
மனதை பாதித்த விடையம்: 4 வயதாக இருக்கும்போது(1958ல்) நடந்த இனக் கலவரம்
இளவயதில் அவரைக் வெகுவாகக் கவர்ர்ந்த அரசியல்வாதி, திரு. நவரட்ணம் மற்றும் வேணுகோபால் மாஸ்டர்
இளவயதில் இணைந்த அமைப்பு: "தமிழ் மாணவர் பேரவை", மற்றும் தமிழ் இளைஞர் பேரவை
பிரபாகரனுக்கு முதல் முதலாக துப்பாக்கி விற்ற நபர் பெயர்: சம்பந்தன்(பருத்தித்துறையில் வசித்து வந்தவர்)
கைத்துப்பாக்கியின் விலை: 150 ரூபா: தனது மோதிரத்தை விற்று பிரபாகரன் அந்த கை துப்பாக்கியை வாங்கினார்.

                    1983 செப்டெம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட 5 பேர் உண்ணாவிரம் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சோர்வடைந்து இறக்கும் தறுவாயில் இருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு சென்றார் பிரபாகரன். அங்கே அவர்கள் சென்னையில் இந்திரா நகரில் உள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீட்டில் 5 வரும் தங்கி இருந்தார்கள். பிரபாகரன் ஒரு போராளி அவர் ஒரு இயக்கத்தை கொண்டு நடத்துகிறார் என்று மக்களால் அறியப்பட்டவர். அவரை பார்த்தாலே பலருக்கு பயமாக இருக்கும். ஆனால் நான் அவர் மேல் மஞ்சல் தண்ணீரை ஊற்றுவேன் ... எனக்கு அவர்மேல் பயம் கிடையாது என்று தோழிகளிடம் சவால் விட்டவர் வேறு யாரும் அல்ல மதிவதனி தான். இந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிப் பண்டிகை தினத்தில், பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு வரவே, சற்றும் பயப்பிடாமல் மஞ்சல் தண்ணீரை எடுத்து பிரபாகரன் மேல் ஊற்றிவிட்டார் மதிவதனி. இதனால் சடுதியாக கோபம் அடைந்த பிரபாகரன் அவரை கடிந்து தள்ளினார்.
அழுதுகொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்த மதிவதனி அவ்விடத்தை விட்டு எழுந்துகொள்ளவே இல்லை. நீண்டநேரம் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்ட தயாரான பிரபாகரன், அங்கே ஒரு முலையில் மதிவதனி உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதை கவனித்தார். கிட்டச் சென்று அழவேன்டாம் என்று ஆறுதல் கூறினார். அன்றில் இருந்துதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது. பின்னர் ஒரு நாள் அவர் பூ வாங்கிக்கொண்டு சென்று அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்றவேளை, அவர்கள் காதலை ஆதரித்து, ஆதரவு கொடுத்தது அன்ரன் பாலசிங்கம் தான். 1984ல் இவர்கள் இருவரும் திருமணம் முடித்தார்கள். தலைவரின் சந்தோஷமான நிமிடங்களில், இக்கட்டான காலகட்டங்களில், எல்லாம் அவரோடு துணையாக இருந்தது மதிவதனி அக்கா என்றால் அது மிகையாகாது. 


தலைவர் சிறப்பு பிறந்த நாள் படங்கள்




















Ref: http://www.athirvu.com/newsdetail/1518.html

Sunday 18 May 2014

தமிழ் இன அழிப்பை மறந்த ஊடகங்கள்:

          


   மே 18 2009 இந்த நாளை எந்த தமிழனாலும் மறக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் சிங்கள  மிருகங்களால் படு கொலை செய்ய பட்ட தினம் அது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் நம் மக்களும் ஊடகங்களும் இதை மறந்து போனது மிகவும் வேதனைக்குரியது....

மே18  நாளை மக்களுக்கு நினைவு படுத்தவே இந்த பதிப்பு.

             மே18 தமிழீழ விடுதலைப்புலிகளின் மண்டியிடாத வீரத்தையும், போராடும் புலிகளுக்குத் துணையாக நின்ற மக்களின் தளராத உறுதியையும் வெளிப்படுத்தும் நாள். சிங்களப் பேரினவாதம் விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நாள். பூமிப்பந்திலுள்ள தமிழரின் நெஞ்சங்களில் எல்லாம்; விடுதலை நெருப்பைக் கனன்று எரிய வைத்த நாள்.

                 செந்நெருப்பு என்பது ஆக்கத்தின் குறியீடு. புத்தெழுச்சியின் குறியீடு. அதேநேரம் பேரழிப்பின் குறியீடு. போராளிகளின் மண்டியிடாத வீரம் - மக்களின் தளராத உறுதி இனமொன்றின் பேரழிப்பு  விடுதலைப் போராட்டத்தின் புத்தெழுச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் குறியீடாகவே செந்நெருப்பு விளங்குகிறது. எனவேதான் மே18 முள்ளிவாய்க்கால் நாளை நாம் “செந்நெருப்புநாள்”  எனப் பெயரிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் காலங்காலமாக நினைவு கொள்ள வேண்டிய நாளாகப் பிரகடனம் செய்கின்றோம். “மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்” இனிவருங்காலமெல்லாம், தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரினதும் வாழ்விலும் வரலாற்றிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய நாளாகத் திகழும்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

























    மனசாட்சி உள்ள தமிழர்கள் இதை நினைவு கூர்வோம்  தமிழ் இனம் காப்போம் ..

அன்பை போதித்த புத்தனுக்கு மனித படையல் வைத்த சிங்கள கூட்டமே,
உன் தண்டனை நாள் வெகு தொலைவில் இல்லை. ...


"மே 18"  - போர் குற்ற நாள்

விழி, குரல் கொடு ........

-நட்ச்சத்திரன்

Wednesday 2 April 2014

99% சாதித்துவிடோம் இன்னும் 1% பாக்கயுள்ளது - முதல்வர்.

செய்தி:

          மின் வெட்டை சரி செய்வதில் 99% சாதித்துவிடோம் இன்னும் 1% நிறைவேற்ற பட வேண்டியது - முதல்வர்.

"வாத்து முட்டை " :


    மன்னிக்கவும் மேடம்  99% சாதித்துவிடோம் என்பது தவறான செய்தி, 50% சாதித்துள்ளீர்கள்.... 


தற்போதைய மின்வெட்டு நேர தகவல்
----------------------------------------------------------------    
காலை         :- 9 முதல் 12 வரை        - 3 மணி நேரம் 
மதியம்        :- 3 முதல் 6 வரை          - 3 மணி நேரம்  
மாலை        :- 7 முதல் 8 வரை           - 1 மணி நேரம்  
இரவு           :- 9 முதல் 10 வரை        - 1 மணி நேரம்  
இரவு           :- 11 முதல் 1 வரை        - 2 மணி நேரம்  
அதிகாலை :- 11 முதல் 1 வரை         - 2 மணி நேரம்  


        ஆக மொத்தம் 12 மணி நேரம் மின்வெட்டு ( 50%)...
        ஆகையால் 50% மின்வெட்டை சாதித்துள்ளீர்கள் இன்னும் 50% பாக்கயுள்ளது. அதையும் சாதிங்க.... 



16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை தடை!!

செய்தி:


               வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரித்தானியா தமிழர் பேரவை உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை அரசு திடீரென தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

         
        இலங்கை அரசால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் இடம்பெற இருக்கும் அமைப்புகள்:

1.தமிழீழ விடுதலைப் புலிகள் 
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (டி.ஆர்.ஓ) 
3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. 
4. பிரித்தானியத் தமிழர் பேரவை. 
5. உலகத் தமிழர் அமைப்பு.
6. கனேடிய தமிழ் காங்கிரஸ். 
7. ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ். 
8. உலகத் தமிழர் பேரவை. 
9. தேசிய கனேடியத் தமிழர் பேரவை. 
10. தமிழ்த் தேசிய பேரவை. 
11. தமிழ் இளைஞர் இயக்கம். 
12. உலகத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. 
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். 
14. தமிழீழ மக்களவை. 
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம். 
16. தலைமைச்செயலக குழு.

"வாத்து முட்டை " :


              அதான் சிங்களனுக்கு தமிழ், தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்கின்ற வார்த்தையையே புடிக்காதே... !!
        அப்புறம் எப்படி இதையெல்லாம் விட்டு வைப்பார்கள்