நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Sunday 18 May 2014

தமிழ் இன அழிப்பை மறந்த ஊடகங்கள்:

          


   மே 18 2009 இந்த நாளை எந்த தமிழனாலும் மறக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் சிங்கள  மிருகங்களால் படு கொலை செய்ய பட்ட தினம் அது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் நம் மக்களும் ஊடகங்களும் இதை மறந்து போனது மிகவும் வேதனைக்குரியது....

மே18  நாளை மக்களுக்கு நினைவு படுத்தவே இந்த பதிப்பு.

             மே18 தமிழீழ விடுதலைப்புலிகளின் மண்டியிடாத வீரத்தையும், போராடும் புலிகளுக்குத் துணையாக நின்ற மக்களின் தளராத உறுதியையும் வெளிப்படுத்தும் நாள். சிங்களப் பேரினவாதம் விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நாள். பூமிப்பந்திலுள்ள தமிழரின் நெஞ்சங்களில் எல்லாம்; விடுதலை நெருப்பைக் கனன்று எரிய வைத்த நாள்.

                 செந்நெருப்பு என்பது ஆக்கத்தின் குறியீடு. புத்தெழுச்சியின் குறியீடு. அதேநேரம் பேரழிப்பின் குறியீடு. போராளிகளின் மண்டியிடாத வீரம் - மக்களின் தளராத உறுதி இனமொன்றின் பேரழிப்பு  விடுதலைப் போராட்டத்தின் புத்தெழுச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் குறியீடாகவே செந்நெருப்பு விளங்குகிறது. எனவேதான் மே18 முள்ளிவாய்க்கால் நாளை நாம் “செந்நெருப்புநாள்”  எனப் பெயரிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் காலங்காலமாக நினைவு கொள்ள வேண்டிய நாளாகப் பிரகடனம் செய்கின்றோம். “மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்” இனிவருங்காலமெல்லாம், தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரினதும் வாழ்விலும் வரலாற்றிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய நாளாகத் திகழும்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

























    மனசாட்சி உள்ள தமிழர்கள் இதை நினைவு கூர்வோம்  தமிழ் இனம் காப்போம் ..

அன்பை போதித்த புத்தனுக்கு மனித படையல் வைத்த சிங்கள கூட்டமே,
உன் தண்டனை நாள் வெகு தொலைவில் இல்லை. ...


"மே 18"  - போர் குற்ற நாள்

விழி, குரல் கொடு ........

-நட்ச்சத்திரன்

No comments:

Post a Comment