நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Tuesday 22 January 2013

யாழ்ப்பாணத்தில் பாக்கிஸ்தான் உளவுப்பிரிவின் மையம்: ரா எச்சரிக்கை !

யாழ்ப்பாணத்தில் பாக்கிஸ்தான் உளவுப்பிரிவின் மையம்: ரா எச்சரிக்கை !




       இலங்கை வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், பாகிஸ்தான் SIGINT நிலையம் ஒன்றை அமைத்திருப்பதாக இந்திய உளவுத் துறையான றோ கருதுவதாக தெரியவருகிறது. தகவல் வெளியாகி உள்ளது. SIGINT என்பது Signals Intelligence என்பதன் உளவு வட்டாரப் பெயர். யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து இந்த ரகசிய SIGINT நிலையம் இயங்குவதாகவும், இந்தியா ட்ரான்ஸ்மிட் பண்ணும் சிக்னல்களை அங்கு கவர்ந்து, உளவு பார்ப்பதாகவும், றோ மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

றோ மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவு அறிக்கையில், �கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியது. அந்த சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் SIGINT நிலையத்தை அமைத்திருக்கலாம்� என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. றோவின் இந்த உளவு அறிக்கையை தொடர்ந்து, நேற்று டெல்லியில் இந்திய பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் அவசரமாக கூடி ஆலோசித்தனர் என்ற தகவலும் கசிந்துள்ளது.

அப்போது இந்த விஷயத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும், பாகிஸ்தானின் SIGINT நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது, குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்று கோருவதென்றும் இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒரு நாட்டின் எல்லையை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், சீனா ஏற்கனவே அந்தமான் தீவுகளின் கப்பல் நகர்வுகளை கண்காணிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான கண்காணிப்பு மையத்தை அமைத்திருந்ததையும், டில்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் SIGINT நிலையத்தை அமைப்பதன் மூலம், விசாகப்பட்டினத்தில் உள்ள, ஐ.என்.எஸ். சக்ரா அணு நீர்மூழ்கி கப்பல் (சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்திய கடற்படைக்காக வாங்கப்பட்டது) மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை கண்காணிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இதனால் இந்த விவகாரத்தை அதி உயர்மட்ட எச்சரிக்கையாக எடுத்து நடவடிக்கை மேற்கொள்வது என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில், இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, பாதுகாப்பு தரப்பினர் புரிந்து கொண்டுள்ள அளவுக்கு பொதுமக்கள் புரிந்து கொண்டிருக்க சந்தர்ப்பம் இல்லை. Believe it or not, இது தலை போகும் விவகாரம்.

கீழேயுள்ள வாக்கியத்தை நீங்கள் பல ஊடகங்களில் படித்திருப்பீர்கள்:

�மத்திய அரசு அவ்வப்போது இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. சீனா அல்லது பாகிஸ்தான் இலங்கையுடன் நெருக்கமாகி விடாமல் தடுப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. பாகிஸ்தான் அல்லது சீனாவும் இலங்கையும் நெருங்கினால், இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும்�

இந்த வாதம் பெரிதாக எடுபடுவதில்லை.

காரணம், என்ன அச்சுறுத்தல் என்று யாரும் எழுதுவது கிடையாது. இந்த விவகாரங்களை விளக்கமாக தெரிந்த பலருக்கு எழுத வராது. எழுத தெரிந்த பலருக்கு, இப்படியான விவகாரங்கள் சுட்டுப் போட்டாலும் வராது. சமீபத்தில் ஒரு ஊடகத்தில், �சீனா இலங்கையில் கால்பதித்தால், அங்கிருந்து ஒரே ஏவுகணையில் இந்தியாவை தாக்க முடியும்� என்று எழுதி கிச்சுகிச்சு மூட்டினார்கள். சீனா, இந்தியா மீது ஏவுகணை ஏவுவதற்கு, அதை தூக்கிக்கொண்டு இலங்கை வரை வரத் தேவையில்லை ஸ்வாமி. அவர்களிடம் லாங் ரேஞ்ச் பாலஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. சீனாவில் இருந்தே ஏவலாம். அப்படியானால் என்னங்க விவகாரம் ? சீனா, அல்லது பாகிஸ்தான் எதற்காக இலங்கையை நெருங்க கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது ? இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. அநேகம் ராணுவ ரீதியான காரணங்கள்தான். தமிழ் மீடியாக்களில் இப்படியான ராணுவ புலனாய்வு விவகாரங்கள் வெளியாவதில்லை.

சீனா, இலங்கையுடன் நெருங்க முயற்சிப்பதை மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதற்கான நிஜ காரணங்களில் ஒன்று, சீனா ஏற்கனவே பாகிஸ்தானுடன் சில ராணுவ டீல்களை செய்துள்ளது. அதை இந்தியாவால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அதே பாடத்தை சீனா, இலங்கையிலும் படிக்க விடக்கூடாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு. காரணம், இந்த சீனா-பாகிஸ்தான் கூட்டணி, இந்தியாவுக்கு எதிரானது.

பாகிஸ்தான் கடற்படையைப் பற்றி எந்தளவுக்கு உங்களுக்கு தெரியும்?

வெளிப்படையாக பெரிதாகப் பெயர் பெற்றிருக்கா விட்டாலும், பாகிஸ்தானின் கடற்படையும் லேசுப்பட்டதல்ல. அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக தனது கடற்படையை விரிவுபடுத்துவதிலும், பலமாக்குவதிலும் பாகிஸ்தான் அதீத கவனம் செலுத்தி வருகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் கடற்படை முன்னெப்போதும் இல்லாத அளவில் எழுச்சி பெற்றிருக்கின்றது. இன்றைய நிலையில் பாகிஸ்தானின் கடற்படையில் 25,000 பேர் உள்ளனர். இந்த 25,000 பேரும் ஒவ்வொரு விதமாக பாகிஸ்தானிய கடற்படையில் இருக்கும் 71 கப்பல்களில் இணைக்கப்பட்டுள்ளனர். பாக். கடற்படையில் உள்ள 71 கப்பல்களிலும் மிகப் பெரியவை எவை என்று பார்த்தால், 11 போர்க்கப்பல்களும், 5 நீர்மூழ்கிக் கப்பல்களும். (பாக். கடற்படையிடம் 40 விமானங்களும் உள்ளன)

இவற்றில் போர்க்கப்பல்களில் 7 நீண்டகாலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவை. தொழில்நுட்பமும் பழையது. சுருக்கமாக சொன்னால் விரைவில் ஓய்வு பெற வேண்டிய வயதை அடையப்போகும் 7 கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையிடம் உள்ளன. ஓய்வு பெறும் இந்த கப்பல்களை மாற்றீடு செய்யப்போகும் கப்பல்கள், சீனத் தயாரிப்பு கப்பல்கள். இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் யுத்தம் துவங்கும் அறிகுறிகள் தென்பட்ட காலத்தில், பாகிஸ்தான் சைனாவுடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தம் பற்றிய விபரங்களை இரு தரப்பும் வெளியிடவில்லை. மொட்டையாக �கப்பல் தொடர்பான ஒப்பந்தம்� என்பதுடன் நிறுத்திக் கொண்டன. இவர்கள் இரு தரப்பும் உள்ள நிலையை வைத்து, இவர்களது ஒப்பந்தங்கள் எதை பற்றியவை என்பதை ஊகிப்பது கஷ்டமல்ல. பின்னாட்களில் அந்த விவகாரமும் வெளியாகி விட்டது.

ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது, ஏப்ரல் 2006-ம் ஆண்டில்! மொத்தம் 4 போர்க்கப்பல்கள் வழங்கு ஒப்பந்தம் அது. F-22P போர்க் கப்பல்கள் அவை. இந்த ரக கப்பல்களை ஸூல்ஃபிகர் கிளாஸ் கப்பல்கள் என்பார்கள். முதலாவது கப்பல் ஜூலை 2009-ல் டிலிவரி செய்யப்பட்டது. 2-வது கப்பல் ஜனவரி 2010, 3-து கப்பல் டிசம்பர் 2010 என பாகிஸ்தான் கடற்படையில் இணைந்து கொண்டன. இந்த 3 கப்பல்களுமே சீனாவின் ஹூடொங் ஸொங்ஹூவா ஷிப்யார்டில் கட்டப்பட்டவை. 4-வது கப்பலில் உள்ளது விஷயம். இந்த சீனத் தயாரிப்பு கப்பல், சீனாவில் கட்டுப்படவில்லை. பாகிஸ்தானின் கராச்சி ஷிப்யார்டில் கட்டப்படுகிறது. பாகிஸ்தானிய அரசு அமைப்பான KSEW (Karachi Shipyard and Engineering Works), சீன வல்லுனர்களின் உதவியுடன் கட்டும் சீனக் கப்பல் இது! அடுத்த ஆண்டு (2013) கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது.



சீனா ஒருபோதும் தமது ராணுவ உபகரணங்களை தமது நாட்டுக்கு வெளியே தயாரிக்க அனுமதிப்பதில்லை. இருந்தும் தமது தயாரிப்பு போர்க் கப்பலை பாகிஸ்தானின் கப்பல் கட்டும் மையத்தில் சீன வல்லுனர்களின் உதவியுடன் உருவாக்கி கொடுக்கிறது என்பதிலிருந்து, பாகிஸ்தானும், சீனாவும் எந்தளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாக நெருங்கி வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். இதே ஒப்பந்தத்தில் வேறு சில டீல்களும் இருப்பதாகத் தெரிகிறது.
உதாரணமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருக்கும் சீனாவில் நவீன ஆயுதத் தளபாடத் தொழில்நுட்பங்கள். அத்துடன், வெளியே சொல்லப்படாத எண்ணிக்கையிலான, Z-9C ரக கடற்படை பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள். �வெளியே சொல்லப்படாத எண்ணிக்கை� என்று எழுதுவதன் காரணம், உளவு வட்டாரங்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு எண்ணிக்கையைச் சொல்கிறார்கள். அடுத்துவரும் இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கான காலப் பகுதியில் இருபதில் இருந்து ஐம்பது ஹெலிகாப்டர்கள் கொடுக்கப்படலாம் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ 20-க்கு குறைவான எண்ணிக்கையை யாரும் ஊகிக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம் 20 ஹெலிகாப்டர்கள், அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் கொடுக்கப்படலாம் என்று நாங்களும் ஊகிக்கலாம். கிட்டத்தட்ட இதே காலப் பகுதியில்தான் இந்தியக் கடற்படை நவீனமயப் படுத்தப்பட்டது. உடனே, அவுட்-ஆஃப்-த-வேயாக போய் பாகிஸ்தானுக்கு உதவியது சீனா. அதாவது, இந்தியாவின் வடக்கு எல்லையில் பாகிஸ்தானை ராணுவ ரீதியில் பலமாக்கி விடுகிறது சீனா. இந்தியாவின் தெற்கு எல்லையில் உள்ளது இலங்கை. புலிகளுடன் யுத்தம் முடிந்த பின்னரும், தமது ராணுவத்தை அதே அளவில் மெயின்டெயின் செய்யும் இலங்கை, தற்போது தமது ராணுவத்தை நவீனமயப்படுத்த துவங்குகிறது. சீனா வலிய உதவி செய்ய முன்வந்தால், இந்தியா குறுக்கே புகுந்து தடுக்காவிட்டால், இலங்கை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும்.

புது டில்லியை பொறுத்தவரை, ஏற்கனவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தானுக்குள் சீனாவை நுழைய விட்டாயிற்று. இலங்கைக்கு உள்ளேயும் நுழைய விட்டுவிட்டால், நாளைக்கே ஒரு யுத்தம் வந்துவிட்டால், என்னாகும்? அதுதான், தமிழகத்தில் இருந்து கரடியாக கத்தினாலும், கடிதம் மேல் கடிதம் போட்டாலும், இலங்கை ராணுவத்தினரை இந்தியாவை விட்டு வெளியேற்ற முடியாது என்கிறார்கள் டில்லியில்! வடக்கு எல்லையில் பாகிஸ்தானை பலப்படுத்தும் சீனா, காலப்போக்கில் தெற்கு எல்லையில் இலங்கையையும் பலப்படுத்தினால், இது திசையிலும் போரிட, இந்திய ராணுவம் என்ன வைகோ-சீமானின் பூண்டி படையணியை அழைக்கவா முடியும் ?


Reference: http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3551

No comments:

Post a Comment