நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Friday 28 December 2012

பிரபாகரன் இறந்த இடத்தில் 1 நாள் உறங்க 100 டாலர் களாம் !




      ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில், களப்பு முனை என்னும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை சிங்களவர்கள் நிர்மாணித்துள்ளார்கள். தமிழர்களின் எலும்புக்கூடுகள் புதையுண்டுள்ள இப் பிரதேசத்தில் நந்திக் கடல் களப்புக்கு பக்கத்தில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் என்னவென்று தெரியுமா தமிழர்களே ? அதாவது பிரபாகரன் கொல்லப்பட்ட இடமாம் ! வாழ் நாளில் ஒருமுறைதான் இங்கே நீங்கள் தங்க முடியும் ! பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நீங்கள் உங்கள் பொழுதைப் போக்கி படுத்து உருள வெறும் 100 டாலர்கள் தான், செலவாகும் என சிங்களப் பத்திரிகையான மெளபிம விளம்பரம் வெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் ஹோட்டல் கட்டினால் சிங்களவர்கள் வருவார்கள் என்று தெரிந்தே, இவர்கள் அங்கே விடுதிகளை அமைத்து, போதாக்குறைக்கு சிங்களவர்களுக்கு உசுப்பேத்த பிரபாகரன் கொல்லப்பட்ட இடம் என்று பீலாவேறு காட்டியுள்ளார்கள். இதில் தமிழர்கள் உற்று நோக்கவேண்டிய விடையம் என்னவென்றால், இன்று மட்டுமல்ல என்றைக்குமே சிங்களவர்கள் இனத்துவேஷத்தில் இருந்து விடுபடப்போவது இல்லை என்பது தான் !

தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட இடத்தை, ஒரு கொலைக் களத்தை சுற்றுலாத்தலமாக மாற்றிய படு கேவலமான நாடு எது என்று கேட்டால் அது இலங்கையாகத் தான் இருக்க முடியும். அமெரிக்கர்கள், ஜெர்மன் நாசிகள், இடியமீன், போன்றவர்கள் செய்யத் துணியாத பல காரியங்களை இலங்கை அரச தலைவர்கள் செய்துவருகிறார்கள். ஏற்கனவே புண்பட்டுப் போயுள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில், மேலும் காழ்ப்புணர்வுகளை வளர்க்கவும், சிங்கள இளைய சமுதாயத்தையும் பிழையான வழியில் கொண்டுசெல்லவுமே அரச தலைவர்கள் முனைப்புக்காட்டி வருகிறார்கள்.

BBC நிருபரான ஹாரிசன் பிரான்சிஸ் அவர்கள், இது தொடர்பாக தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஒரு சிங்களப் பத்திரிகை அநாகரீகமான முறையில் விளம்பரப்படுத்தியுள்ளதை அவர் கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


Reference:
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4243

No comments:

Post a Comment