நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Friday 21 December 2012

போதிதர்மன் - Tamil Real Hero Bodhidharma King of Kanchipuram

Tamil Real Hero Bodhidharma King of Kanchipuram (போதிதர்மன்)


   போதிதர்மன்
         போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.



குங்ஃபூவும் போதி தருமனும்

           போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள்
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு 
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)


  7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

8. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
9. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
10. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.


No comments:

Post a Comment