நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 26 December 2012

அகிம்சை மட்டும் தான் சரியான ஆயுதமா ?


         "நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை நமது எதிரிகள் தான் தீர்மானிக்கின்றனர்"  

           "ஒரு போராட்டம் எந்த வழியில் அமைய வேண்டும் என்பதை ஒடுக்குபவரே தீர்மானிக்கிறார் . அவர் எந்த வழியை பின்பற்றுகிறாரோ அதே வழியை ஒடுக்கபட்டவனும் பின்பற்றுகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் நெருப்பை நெருப்பால்தான் வெல்ல முடியும் என்ற நிலை ஏற்படுகிறது."

           ஆப்பிரிக்க விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த போது மண்டேலா கூறிய வார்த்தைகள் தான் இவை 

        அவருடைய கருத்துகளும் பேச்சுகளும் எல்லா நேரத்திலும் ஒரு நாடோ அல்லது ஒரு இனமோ அகிம்சை போராட்டத்தின் மூலம் மட்டும் வெற்றி பெற முடியாது என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது .
இங்கே நம்மவர்கள் அகிம்சை மட்டுமே சரியான வழி என்று போதித்து கொண்டிருக்கும் போது அங்கே அவர் அகிம்சை கூட எல்லா காலங்களிலும் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார் .

        சரித்திர பக்கங்களை கொஞ்சம் ஆழ்ந்து புரட்டினால் அது கொஞ்சம் உண்மை என்பதற்கு கொஞ்சம் ஆதாரங்களும் கிடைக்கத்தான் செய்கின்றன . 

            தனது நாட்டை பங்கு பிரித்து தரச்சொல்லி பெற்ற மகன் ஒவ்ரங்கசீபால் சிறை வைக்க பட்ட மன்னன் ஷாஜகானின் அகிம்சை போராட்டம் அவருடைய மகனது தந்திரத்தால் முறியடிக்கப்பட்டது . 

       ஆன் சாங் சுகியின் அகிம்சை போராட்டம் இன்னும் மியான்மரை வன்முறையின் பிடியிலிருந்து முழுவதுமாக மீது விடமுடியவில்லை .

      மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் ஏன் அவருடைய உயிரை கூட காப்பாற்ற வில்லை .

        "சுட்டவனுக்கு தீங்கு செய்யாதீர்"  என்று அவர் கூறிய பின்பும் அவருடைய கொள்கை கூட காப்பற்றபடாமல் ஏன் கோட்சே தூக்கிலிடப்பட்டார் . ஏன் நம்மவர்கள் அவரையும், அவரது ஆசையை கூட நிறைவேற்றவில்லை .

       அறவழியில் போராடி தனி ஈழம் பெறுவோம் என்று சூளுரைத்து போராடிய முன்னாள் தமிழ் ஈழ அரசியல் வாதிகள் ஏன் படுகொலை செய்யப்பட்டனர் .

      ஆயுதம் தாங்கிய வன்முறை போராட்டங்கள் நிச்சயம் தோல்வி பெரும் என்று கூறும் அகிம்சா மூர்த்திகளால் அறப்போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்பதை எத்தனை சதவீதம் நிச்சயமாக கூற முடியும் .

      நாம் எதிர்கொள்ளும் எதிரிக்கு அகிம்சையின் பலம் என்னவென்று தெரியாவிட்டால் நாம் எப்படி அந்த ஆயுதத்தை கையில் எடுப்பது ?.

     வெள்ளைகொடியின் அர்த்தமே தெரியாத எதிரியிடம் எப்படி சமாதான கொடி காட்டுவது ? .

            நாம் பேச விரும்பும் மொழிதெரியாத எதிரியுடன் எப்படி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும் ?. நாம் அவர்கள் மொழியை கற்றுகொண்டால் மட்டுமே முடியும் . அவர்கள் மொழி வன்முறையாக மட்டுமே இருந்தால் நாம் எந்த மொழியில் பேசுவது ? .

       இப்படியாக ஏராளமான கேள்விகளுடன் , குழும நண்பர்களின் மேலான சிந்தனயுள்ள பதில்களை எதிர்பார்க்கும்........

No comments:

Post a Comment