நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 26 December 2012

உங்க ரயில் எங்கேயிருக்குன்னு இனி கூகுல் மேப்பிலேயே பார்க்கலாம்!!


 
                   நான் சென்ற புதன்கிழமை சென்னையிலிருந்து பெங்களூருக்கு வர மாலை 5:25 மணிக்கு ஒரிசாவில் இருந்து வரும் ஒரு  சிறப்பு வண்டியில் டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  சென்னை நகரப் பேருந்தில் அடிச்சு பிடிச்சு அங்கே போனதுக்கப்புறம்தான் சொல்றாங்க அந்த வண்டி மூணு மணி நேரம் லேட்டுன்னு.  அப்புறம் கடைசியா 9:45 மணிக்குத்தான் வந்தது.  இது முதலிலேயே தெரிஞ்சிருந்தா நான் வீட்டிலேயே இருந்திட்டு வந்திருப்பேனே என்று நினைத்தேன்.  இனி அந்த பிரச்சினை இல்லை, எங்கே வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய  நேரத்துக்கு ஒருபோதும் கரெக்டா வராது, எப்பவுமே தப்பான நேரத்துக்குத்தான் வரும் என்ற நிலையில் உள்ள உங்கள் ரயில் எந்த ஒரு நேரத்திலும் எங்கேயிருக்குன்னு இனி இணையத்திலேயே தெரிஞ்சுக்கலாம்!!  இந்தத் தகவல் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் புதுப்பிக்கப் படும்,  CRIS என்னும் ரயில்வே பொதுத் துறை நிறுவனம் ரயில் யாத்ரியுடன் இணைத்து தயாரித்துள்ள இந்த செயலி [Application] இணைய இணைப்புள்ள கைபேசியிலும் செயல்படும்.


Join Only-for-tamil
நீல நிறத்தில் உள்ள ரயில்கள் சரியான நேரத்திலும், சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட ரயில்கள் கால தாமதமாகவும் இயங்குகின்றன.
  
Join Only-for-tamil

மஞ்சள் வண்ணத்தில் உள்ள கோடு ரயில் செல்லும் பாதையைக் குறிக்கிறது.
Join Only-for-tamil
ரயில் இயங்குவது பற்றிய தகவல்கள். நான் பாட்னாவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு வரும் சங்கமித்ரா விரைவு வண்டியைத் தேர்ந்தெடுத்தேன்.
        ரயில் ரேடார்  [RailRadar] எனப்படும் இந்த வசதியை இந்திய ரயில்வே  நிர்வாகம் சென்ற புதன் கிழமையன்று கூகுல் மேப்பில் அறிமுகப் படுத்தியுள்ளது. ரயில்வே இயக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட வண்டிகளில் 6500 வண்டிகள் தற்போது இந்த வசதியில் சோதனை முறையில் சேர்க்கப் பட்டுள்ளன, விரைவில் எல்லா வண்டிகளும் சேர்க்கப் படும்.
            இதைப் பயன்படுத்த எந்த வண்டியின் பெயரையோ, நம்பரையோ நினைவில் வைத்துக் கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை.  அது புறப்படும் இடம் சேரும் இடத்தை உள்ளிட்டாலே போதும், அதற்கிடையே ஓடும் எல்லா வண்டிகளும் காண்பிக்கப் படும், நீங்கள் அவற்றில் தேவையானதை தேர்ந்தெடுத்து அது குறித்த தகவல்கள் [புறப்படும்/சேரும் நேரங்கள், வண்டி செல்லும் வழி, நிற்கும் நிலையங்கள்/நேரங்கள், சரியான நேரத்தில் இயங்குகிறதா/கால தாமதம் எவ்வளவு, நிலையத்திற்கு எந்த நேரத்துக்கு வரக்கூடும் முதலான தகவல்கள்]  அத்தனையும் பெறலாம்.அல்லது கூகுள் மேப்பில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தை ஜூம் செய்து பெரிதாக்கினாலே போதும் அங்கிருந்து செல்லும் வண்டிகள் அத்தனையும் காண்பிக்கும், அவற்றில் உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம்.http://railradar.trainenquiry.com/

No comments:

Post a Comment